இந்தியா

கர்நாடக தேர்தல்: அரசியல் வாரிசுகளின் வெற்றி நிலவரம்

கர்நாடக தேர்தலில் போட்டியிட்ட முக்கிய கட்சித் தலைவர்களின் மகன்களின் நிலை என்ன என்பது தொடர்பான ஒரு கண்ணோட்டம்.

DIN

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் போட்டியிட்ட முக்கிய கட்சித் தலைவர்களின் மகன்களின் நிலை என்ன என்பது தொடர்பான ஒரு கண்ணோட்டம்.

தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 119 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும், மஜத 25 இடங்களில் முன்னிலையில் உள்ளன. 

தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலில் போட்டியிட்ட வாரிசுகளின் நிலை என்ன என்பதைப் பார்க்கலாம்.

எடியூரப்பாவின் மகனுக்கு வெற்றி
முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திரா, கர்நாடக சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட பி.ஒய். விஜயேந்திரா வெற்றிபெற்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 81 ஆயிரம்.

அந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோனி மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.  விஜயேந்திராவுக்கு அடுத்படியாக, சுயேச்சை வேட்பாளர் நாகராஜ கௌடா 70 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே மகன் வெற்றி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே கர்நாடக மாநிலம் சித்தாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் ஆரம்பம் முதலே வெளியான நிலவரப்படி பிரியங்க் கார்கே முன்னிலையில் இருந்தார்.

பாஜக வேட்பாளர் மணிகண்ட் ரத்தோட்டைவிட 12 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

2013 மற்றும் 2018 தேர்தல்களிலும் பிரியங்க் கார்கே இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குமாரசாமியின் மகன் தோல்வி
கர்நாடக மாநிலம் ராமநகர தொகுதியில், முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி தோல்வியடைந்தார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் உசேன் வெற்றி பெற்றார். நிகில் குமாரசாமி இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

காலையிலிருந்தே, ராமநகர தொகுதியில் நிகில் குமாரசாமி பின்னடைவில் இருந்தார். ஒருகட்டத்தில் இக்பால் உசேன் கிட்டத்தட்ட 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அதன்பிறகு 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இக்பால் வெற்றி பெற்றுவிட்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத்தேர்தலில் இக்பாலை தோற்கடித்து குமாரசாமி வெற்றிபெற்றிருந்தார். இந்த தேர்தலில் அவருக்கு பதிலாக இந்தத் தொகுதியில் அவரது மகனை களமிறக்கினார். ஆனால், அவர் எதிர்பாராத வகையில், நிகில் தோல்வியை சந்தித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT