முகப்பு
இந்தியா

கொச்சி அருகே 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

கொச்சி அருகே கடற்பகுதியில் சுமார் 15,000 கோடி மதிப்பிலான 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

கொச்சி அருகே கடற்பகுதியில் சுமார் 15,000 கோடி மதிப்பிலான 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், இந்திய கடற்படையுடன் இணைந்து கொச்சி அருகே கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த கப்பலை மறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 2,500 கிலோ அளவிலான மெத்தம்பேட்டமைன் எனும் போதைப்பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பபட்டது. 

உடனே அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.15,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இதுதொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஈராக்கில் இருந்து அஸ்திரேலியாவுக்கு இந்த போதைப்பொருள் கடத்தப்பட்டபோது பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.