இந்தியா

கர்நாடக தேர்தலில் வெற்றி வாகை சூடிய 92 வயது வேட்பாளர்!

DIN


பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 92 வயதான காங்கிரஸ் மூத்த தலைவர் சாமனூர் சிவகங்கரப்பா  வெற்றி வாகை சூடியுள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. 
காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மூத்த தலைவர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கனகபுரா தொகுதியிலும், முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி அதானா தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் காந்தி நகர் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

தேவாங்கரே தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 92 வயதான மூத்த தலைவர் சாமனூர் சிவகங்கரப்பா போட்டியிட்டார். 

அவர் இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற வேட்பாளர்களில் இவர் அதிக வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த சிவசங்கரப்பா, எனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், கடவுள் அருளும் உள்ளது. வேறென்ன வேண்டும் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

SCROLL FOR NEXT