புதுதில்லி: தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டக் மெக்மில்லன் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்க பதிவில், வால்மார்ட்டின் தலைமை செயல் அதிகாரி டக் மெக்மில்லன் உடனான சந்திப்பு பலனளிப்பதாக இருந்தது. வெவ்வேறு விஷயங்களில் நுண்ணறிவு கலந்த விவாதங்களை நடத்தினோம்.
முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான இடமாக இந்தியா உருவாகி வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முடிவெடுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.