முகப்பு
இந்தியா

மோடி எத்தனை பேரணி மேற்கொண்டாலும் வீண்தான்: காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடி எத்தனை பேரணி மேற்கொண்டாலும் வீண்தான் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப் படம்)
பகிர்:


பிரதமர் நரேந்திர மோடி எத்தனை பேரணி மேற்கொண்டாலும் வீண்தான் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான (136) இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவை. இதைத் தொடா்ந்து, ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடக தேர்தல் குறித்து பேசிய ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் பிரசாரத்தைக் கண்டு மக்கள் சோர்வடைந்துள்ளனர். மோடி எத்தனை சாலைப்பேரணிகளை மேற்கொண்டாலும் அது வீண்தான். மக்களை அது உற்சாகமடையச் செய்யவில்லை. நமக்குத் தேவையானது எது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் 224 தொகுதிகளில் 136 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →