முகப்பு
இந்தியா

ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சத்யேந்தர் ஜெயின் மனுத் தாக்கல்

பணமோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:57 PM
சத்யேந்தர் ஜெயின்
பகிர்:

பணமோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

2015-16 ஆண்டுகளில் தில்லி அமைச்சராக சத்யேந்தா் ஜெயின் பதவி வகித்தபோது, வருமானத்திற்கு மாறான சொத்து மற்றும் பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2017, ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ--யும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த மே 30-ஆம் தேதி சத்யேந்தா் ஜெயினை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா்.

மேலும் பணமோசடி தொடர்பாக கடந்த ஏப்ரலில், சத்யேந்தா் ஜெயின் குடும்பம் மற்றும் நிறுவனங்கள் தொடா்புடைய ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

இதனிடையே சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அவர் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →