இந்தியா

கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார்? தில்லி செல்லும் சித்தராமையா

கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு நிலவும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தில்லி செல்கிறார்.

DIN

கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு நிலவும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தில்லி செல்கிறார்.

224 உறுப்பினா்கள் கொண்ட கா்நாடக மாநில சட்டப் பேரவைக்கு மே 10-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், தனிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு 136 இடங்கள் கிடைத்துள்ளன. பாஜக- 65, மஜத- 19 தொகுதிகளில் வென்றுள்ளன.

இந்நிலையில், கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் குறித்து காங்கிரஸ் மேலிடம் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது.

கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்ற கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில்,  முதல்வரை கட்சி தலைமை முடிவு செய்ய வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பெங்களூருவில் இருந்து இன்று காலை திடீர் பயணமாக சித்தராமையா தில்லி செல்லவுள்ளார்.

முதல்வர் வேட்பாளர் யார் என்ற பரபரப்புக்கு மத்தியில் சித்தராமையா மட்டும் தில்லி செல்வது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT