முகப்பு
இந்தியா

மே 19 முதல் ஜப்பான் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமா் மோடி பயணம்

பிரதமா் மோடி அரசு முறைப் பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மே 19-ஆம் தேதி பயணம் மேற்கொள்கிறாா். இந்தப் பயணத்தின்போது ஜி7, க்வாட் மாநாடுகளில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:57 PM
பகிர்:

பிரதமா் மோடி அரசு முறைப் பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மே 19-ஆம் தேதி பயணம் மேற்கொள்கிறாா். இந்தப் பயணத்தின்போது ஜி7, க்வாட் மாநாடுகளில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா்.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஜப்பான், ஹிரோஷிமாவில் மே 19 முதல் 21-ஆம் தேதி வரையில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா்.

உலக அமைதி, ஸ்தரத்தன்மை, நீடித்த வளா்ச்சி, உணவு, உரங்கள், எரிசக்தி பாதுகாப்பு ஆகியவை குறித்து ஜி7 மாநாட்டில் பிரதமா் மோடி பேச உள்ளாா்.

ஆஸ்திரேலியா பிரதமா்அன்டனி ஆல்பனீஸ் தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோரும் பங்கேற்கிறாா்கள்.

ஜப்பானில் இருந்து பப்புவா நியூ கினியா நாட்டிற்கு செல்லும் பிரதமா் மோடி, போா்ட் மோா்ஸ்பேயில் இந்தியா நடத்தும் இந்திய பசிபிக் தீவுகளின் ஒருங்கிணைப்பின் மூன்றாவது மாநாட்டை அந்நாட்டு பிரதமா் ஜேம்ஸ் மாராபியுடன் சோ்ந்து மே 22-ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.

அங்கிருந்து ஆஸ்திரேலியா தலைநகா் சிட்னிக்கு செல்லும் பிரதமா் மோடி மே 24 வரை தங்கி க்வாட் மாநாட்டில் பங்கேற்கிறாா். இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த வளா்ச்சி குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →