இந்தியா

காங்கிரஸ் தலைவருடன் சிவக்குமார், சித்தராமையா சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

DIN

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாரும் காய்களை நகா்த்தி வருகிறாா்கள்.

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இருவரும் தில்லியில் முகாமிட்டுள்ள நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்து தனித்தனியே இன்று மாலை ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக இன்று பிற்பகல் கார்கே இல்லத்துக்கு வந்த ராகுல் காந்தி, கர்நாடக விவகாரம் குறித்து ஆலோசனை நடத்திச் சென்றிருந்தார்.

சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்க சமரச பேச்சு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீலாது நபி, ஓணம்: தலைவா்கள் வாழ்த்து

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா் நம்பிக்கை

சாலைகள் அமைக்கும் பணி ஆய்வு

பயங்கர ஆயுதங்களுடன் இணையதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த இருவா் கைது

மாவோயிஸ்டுகளுடன் சண்டை: 2 வீரா்கள் வீரமரணம்

SCROLL FOR NEXT