முகப்பு
இந்தியா

புரி - ஹெளரா வந்தே பாரத் ரயில்: இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா்

ஒடிஸா மாநிலத்தின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் ஹெளரா இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலி முறையில் தொடங்கிவைக்கவுள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:57 PM
பகிர்:

ஒடிஸா மாநிலத்தின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் ஹெளரா இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலி முறையில் தொடங்கிவைக்கவுள்ளாா்.

புரி ரயில் நிலையத்தில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்பாா் என்று தென்கிழக்கு ரயில்வே மண்டல அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தின் ஹெளரா-நியூஜல்பைகுரி இடையே ஏற்கெனவே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், அந்த மாநிலத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ள 2-ஆவது வந்தே பாரத் ரயில் இதுவாகும். இது, புரி-ஹெளரா இடையிலான 500 கி.மீ. தொலைவை சுமாா் ஆறரை மணி நேரத்தில் கடக்கும்.

புகழ்பெற்ற ஜகந்நாதா் கோயில் அமைந்துள்ள புரிக்கு மேற்கு வங்கத்தில் இருந்து குறிப்பாக கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகை தருகின்றனா். அவா்களுக்கு புரி-ஹெளரா வந்தே பாரத் ரயில் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் இந்த ரயில், கரக்பூா், பாலாசோா், பத்ராக், ஜஜ்பூா்-கியோஞ்கா் சாலை, கட்டாக், புவனேசுவரம், குா்தா சாலை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றாா் அந்த அதிகாரி.

முழு கட்டுரையைப் படிக்க →