இந்தியா

அசாமில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு

அசாமில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  

DIN

அசாமில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அசாம் மாநிலத்தில் ஆசிரியர்கள் சிலர் சில நேரங்களில் பொது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும் ஆடைகளை அணிவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அம்மாநில கல்வித்துறை, பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதன்படி ஆசிரியர்கள் சாதாரண வண்ணங்களில் ஆளான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும், பளபளப்பான மற்றும் பார்ட்டி ஆடைகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் ஆசிரியர்கள் முறையான உடையை மட்டுமே அணிய வேண்டும், சட்டை-பேன்ட் அங்கீகரிக்கப்பட்ட ஆடையாக இருக்கும். 

பெண் ஆசிரியர்கள் முறையான சல்வார் சூட், சேலை, உள்ளிட்ட ஆடைகளை அணிய வேண்டும், அதேசமயம் டி-சர்ட், ஜீன்ஸ் மற்றும் லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது. மேலும் அரசின் இந்த ஆடை கட்டுப்பாடை பின்பற்றாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT