கோப்புப்படம் 
இந்தியா

பிகாரில் வாகனச் சோதனையின் போது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு: காவலர் காயம்

பிகாரில் வாகனச் சோதனையின் போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காவலர் ஒருவர் காயமடைந்தார். 

DIN

பிகாரில் வாகனச் சோதனையின் போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காவலர் ஒருவர் காயமடைந்தார். 
பிகார் மாநிலம், பாட்னாவில் உள்ள காளி கோயில் பகுதி அருகே காவலர்கள் இன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர் காவலர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இந்த சம்பவத்தில் காவலர் ஒருவர் காயமடைந்தனர். 
காயமடைந்த காவலர் உடனடியாக மீட்கப்பட்டு பாட்னாவில் உள்ள ராஜேஸ்வரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் காவலர்கள் தெரிவித்தனர். காலை முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் 6 சந்தேக நபர்களை பிடித்து வைத்துள்ளோம். 
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று எஸ்எஸ்பி கூறினார். மேலும் தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பாட்னாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT