காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே கர்நாடக அமைச்சரவையில் இடம்பெறுகிறார்.
இன்று(மே 20) நடைபெறும் பதவியேற்பு விழாவில் அவர் அமைச்சராக பதவியேற்கிறார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வந்த நிலையில் கட்சித் தலைமையின் நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் ஒருமனதாகத் தேர்வாகியுள்ளனர்.
இதையடுத்து பெங்களூருவில் இன்று(மே 20, சனிக்கிழமை) பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
கர்நாடக முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்கின்றனர். இவர்களுடன் 8 அமைச்சர்களுடன் பதவியேற்க உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஜி. பரமேஸ்வரா, கே.ஹெச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்க்கிஹோலி, ராமலிங்கா ரெட்டி, சமீர் அகமது கான் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.