கோப்புப்படம் 
இந்தியா

ஒடிசாவில் நாளை அமைச்சரவை மாற்றம்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை திங்கள்கிழமை மாற்றியமைக்கப்பட உள்ளது. 

DIN

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை திங்கள்கிழமை மாற்றியமைக்கப்பட உள்ளது. 

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா புவனேஸ்வரில் உள்ள லோக் சேவா பவனில் காலை 9.50 மணிக்கு நடைபெறுகிறது. புதிய அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை மற்றும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் முதல்வர் பட்நாயக்கின் அமைச்சர்கள் குழுவில் இது சிறிய மாற்றமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த மாத தொடக்கத்தில், ஒடிசாவில் பேரவைத்தலைவர் மற்றும் இரண்டு கேபினட் அமைச்சர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இது தவிர, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான நபா கிஷோர் தாஸ் கடந்த ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவர் வகித்த பதவியும் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT