இந்தியா

24 ஆம் தேதி  ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு!

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் புதன்கிழமை (மே. 24) காலை 10 மணிக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும்

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் புதன்கிழமை (மே. 24) காலை 10 மணிக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் தற்போது கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் தர்ம தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். 

இந்த கூட்டம் வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் புதன்கிழமை (மே 24)  காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது. 

எனவே, அன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in இணையதளத்தில் பக்தர்கள் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT