இந்தியா

ஜொமோட்டோ ஆர்டரில் 72 சதவீத ரூ.2000 நோட்டுகள் மாற்றம்!

ஜொமோட்டோ ஆர்டரில் பணமாக செலுத்தும்(Cash on Delivery) வழியில் 72 சதவீதத்தினர் ரூ.2000 நோட்டுகளை மாற்றியுள்ளதாக ஜொமோட்டோ(Zomoto) நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

ஜொமோட்டோ ஆர்டரில் பணமாக செலுத்தும்(Cash on Delivery) வழியில் 72 சதவீதத்தினர் ரூ.2000 நோட்டுகளை மாற்றியுள்ளதாக ஜொமோட்டோ(Zomoto) நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ரூ. 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது. ரூ.2,000 நோட்டுகள் வைத்திருப்போா், செப்.30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

மே 19-ஆம் தேதியிலிருந்து இதுவரை  பணமாக செலுத்தும் வழியில் 72  சதவீதத்தினர் ரூ.2000 நோட்டுகளை மாற்றியுள்ளனர். 

செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை எந்த வங்கிக் கிளையிலும் மாற்றிக் கொள்ளலாம். அத்தகைய நோட்டுகளை வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வரும் 23-ஆம் தேதி முதல் வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம். 

சேமிப்புக் கணக்கில் ரூ.2,000 நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், சில்லறையாக மாற்றும்பட்சத்தில் ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ.20,000 மதிப்பிலான தொகையை மட்டுமே மாற்ற முடியும்.

வாடிக்கையாளா் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் மட்டுமல்லாமல், எந்த வங்கியின் கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது. வங்கிக் கணக்கு இல்லாமலும் ரூ.20,000 வரையில் மாற்றலாம்.

பெட்ரோல் பங்குகளில்  ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசுப் பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை பெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், பயணிகளிடம் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஆக. 12-ல் தே.ஜ.கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!

கருப்பு புறா... பிரியங்கா மோகன்!

சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஆணவக் கொலைகளை திருமா ஆதரிக்கிறாரா?திமுகவை விமர்சிக்கத் தயங்குவது ஏன்? தமிழிசை கேள்வி!

SCROLL FOR NEXT