அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா 
இந்தியா

2023 இறுதிக்குள் ஆயுதப்படை சட்டம் திரும்பப் பெற இலக்கு: அசாம் முதல்வர்

அசாமில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டமானது இந்தாண்டு இறுதிக்குள் திரும்பப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா திங்கள்கிழமை தெரிவித்தார்.

DIN

அசாமில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டமானது இந்தாண்டு இறுதிக்குள் திரும்பப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா திங்கள்கிழமை தெரிவித்தார்.

நாட்டில் அமைதிக் குறைவான பகுதிகள் என்று குறிப்பிடும் அருணாசலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் ஆயுதமேந்திய படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  

அசாம் மாநிலத்தில் 1990-ல் அமல்படுத்தப்பட்ட இச்சட்டம் 7 முறை விரிவாக்கம் செய்யப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக சில பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ளது. இன்னும் 40 சதவிகிதம் பகுதிகளில் இச்சட்டம் அமலில் உள்ளது.

இந்நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் ஆயுதப்படை சட்டம் திரும்பப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அசாம் காவல்துறையினருக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் மூலம் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஹிமந்த பிஸ்வ தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT