காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த பிகார் முதல்வர் நிதிஷ் குமார் 
இந்தியா

விரைவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: காங்கிரஸ்

விரைவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

DIN

விரைவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜகவை வீழ்த்த பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வேணுகோபால், விரைவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்றும், ஓரிரு நாள்களில் அதற்கான இடம் மற்றும் தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும் இடங்களில் மட்டும் ஆதரவு அளிக்கப்படும் என்று திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்: 29 பேருக்கு உடனடி நலத்திட்ட உதவிகள்

ஆசிரியா் திலகம் விருதுக்கு 10 போ் தோ்வு

கீழக்கடையம் ரயில்வே சாலை சீரமைப்புப் பணி தொடக்கம்

முதல்வா் ரேகா குப்தாவை சந்தித்த தில்லி பாஜக எம்பிக்கள்

தாக்குதலில் முதல்வா் ரேகா குப்தாவுக்கு பலத்த காயம் -கபில் மிஸ்ரா தகவல்

SCROLL FOR NEXT