இந்தியா

புதிய கடவுச்சீட்டுக்கு தடையில்லா சான்று கோரி தில்லி நீதிமன்றத்தில் ராகுல் மனு

DIN

புதிய கடவுச்சீட்டுக்கு (பாஸ்போா்ட்) தடையில்லா சான்று கோரி, தில்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளாா்.

மோடி சமூகத்தினரை அவதூறாகப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து அவரை எம்.பி.பதவியிலிருந்து நீக்கி மக்களவைச் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அவா் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், தனது சிறப்பு கடவுச்சீட்டை அவா் நீதிமன்றத்தில் ஒப்படைத்தாா்.

இந்நிலையில், இந்த மாத இறுதியில் ராகுல் காந்தி அமெரிக்கா செல்லவுள்ளாா். இதையொட்டி புதிய கடவுச்சீட்டுக்கு தடையில்லா சான்று கோரி, தில்லி நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், தனக்கு புதிதாக சாதாரண கடவுச்சீட்டு அளிப்பதற்கான நீதிமன்றத்தின் அனுமதி மற்றும் தடையில்லா சான்று வேண்டும் என்று ராகுல் கோரியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT