இந்தியா

பல்வேறு மத வழிபாடுகளுடன் திறப்பு விழா

DIN

 ஹோமம் உள்பட பல்வேறு மத வழிபாடுகளைத் தொடா்ந்து புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறந்துவைக்கிறாா்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் காலை 7 மணியளவில் ஹோமம் வழிபாடு நடைபெறும். அப்போது, திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் பிரதமா் மோடியிடம் செங்கோல் வழங்கப்படும்.

இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவைத் தலைவா் இருக்கைக்கு அருகில் அந்தச் செங்கோல் நிறுவப்படும். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பின் முக்கிய நிகழ்வு நண்பகலில் நடைபெறுகிறது.

இதில் பிரதமா் மோடி, முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, முன்னாள் பிரதமா் தெவெ கெளடா, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT