இந்தியா

பெப்பர் ஸ்பிரே வாங்கும் திகார் சிறைத் துறை நிர்வாகம்: காரணம்?

திகார் சிறையில் பிரத்யேகமான கைத்தடி, மின்சார ஷாக் கொடுக்கும் கருவிகளை சிறைத் துறை நிர்வாகம் வாங்குகிறது.

DIN


புது தில்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்குள் ஏற்படும் மோதல்களைக் கட்டுப்படுத்த, பெப்பர் ஸ்பிரே, பிரத்யேகமான கைத்தடி, மின்சார ஷாக் கொடுக்கும் கருவிகளை சிறைத் துறை நிர்வாகம் வாங்குகிறது.

சிறைக்குள் அதுவும் சிறை அறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்குள் ஏற்படும் மோதல்களைத் தடுக்க மின்சார ஷாக் கொடுக்கும் துப்பாக்கி போன்ற கருவிகளும், கைத்தடிகளுமே உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

சிறைக் கைதிகளுக்குள் ஏற்படும் மோதல்களின்போது, சில நேரங்களில் உயிர்ப்பலிகளும் நேரிடுகின்றன. இதனைத் தடுக்கவே, திகார் சிறைத் துறை நிர்வாகம் பெப்பர் ஸ்பிரே, பிரத்யேகமான கைத்தடி, மின்சார ஷாக் கொடுக்கும் துபாப்பாக்கிப் போன்றவற்றை வாங்குகிறது.

அது மட்டுமல்லாமல், காவலர்களுக்கும், முழு கவச உடை, தலைக்கவசம் ஆகியவையும் வாங்கப்படுகிறது. பாலிகார்பனேட் லத்திகளையும் காவல்துறையினர் கேட்டு வாங்கியுள்ளனர்.

இது குறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், 15 நாள்களுக்கு முன்பு இது குறித்து பரிந்துரை அனுப்பப்பட்டு, தற்போது பொருள்களை வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT