இந்தியா

டேராடூன்- தில்லி இடையே வந்தே பாரத் ரயில்: பிரதமர் தொடக்கிவைத்தார்

உத்தரகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இன்று(வியாழக்கிழமை) கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.

DIN

உத்தரகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இன்று(வியாழக்கிழமை) கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.

டேராடூன் - தில்லி இடையே இயக்கப்பட உள்ள இந்த ரயிலை இன்று டேராடூனில் தொடக்கிவைத்தார். மேலும் இந்த ரயில், பயணிகளின் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

டேராடூன்- தில்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மே 29 முதல் வாரத்தில் 6 நாட்கள்(புதன்கிழமை தவிர) இயக்கப்படும் என்றும் இந்த ரயில் 302 கிமீ தூரத்தை 4.45 மணி நேரங்களில் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மே 18ம் தேதியன்று பூரி மற்றும் ஹவுரா இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் மோடி தொடக்கிவைத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT