இந்தியா

மகாராஷ்டிர அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்: ஃபட்னாவிஸ்

DIN

மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறும் என்று துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். 

மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். கடந்த 2019 மகாராஷ்டிர பேரவைத் தோ்தலுக்கு பிறகு, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கைகோத்து மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியை அமைத்தன. 

முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றாா். சிவசேனையில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட பிளவால், இந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. பின்னா், பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே ஜூன் 30 ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். 

தொடர்ந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி 18 அமைச்சர்கள் பதவியேற்றனர். விதிகளின்படி மாநிலத்தில் அமைச்சர்கள் குழுவில் அதிகபட்சமாக 43 உறுப்பினர்கள் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT