முகப்பு
இந்தியா

ஜனநாயகத்தின் கோயிலான புதிய நாடாளுமன்றம் இந்தியாவை வலிமையாக்கும்: பிரதமர் மோடி

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனநாயகத்தின் கோயில் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:59 PM
பகிர்:

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனநாயகத்தின் கோயில் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் நாட்டின் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ட்விட்டரில் மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரியினை டேக் செய்து பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் ஜனநாயகத்தின் கோயிலாக இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு செல்லட்டும். லட்சக்கணக்கான மக்களுக்கு அதிகாரத்தை வழங்கட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்விட்டினை எனது நாடாளுமன்றம், எனது பெருமை என்ற ஹேஸ்டேக்கினை பயன்படுத்தி அவர் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற விடியோவினை தங்களது குரலுடன் மக்கள் பகிருமாறும் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். அவ்வாறு மக்கள் பகிர்ந்த விடியோக்கள் சிலவற்றை பிரதமர் நரேந்திர மோடி ரீ-ட்விட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.