இந்தியா

புதிய நாடாளுமன்றக் கட்டடம் - புகைப்படங்கள்!

DIN

தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 28) திறந்துவைக்கிறார். 

இதையொட்டி, புதிய நாடாளுமன்றத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

முன்னதாக, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. 

திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.  

நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. 

இது குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு பெரும் அவமதிப்பு என்பதுடன் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும் எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன. 

ஆனால் இந்த நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

புதிய நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகே தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதினம் அளித்த செங்கோல் நிறுவப்படுகிறது. 

இதையொட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் பலரும் தில்லிக்கு சென்று திறப்பு  கலந்துகொள்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT