கோப்புப் படம். 
இந்தியா

லக்னௌவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் அருகே ட்ரோன் பறக்கவிட்ட இளைஞர் கைது

முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

DIN

முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, ஹஸ்ரத்கஞ்ச் சந்திப்பில் உள்ள கஸ்மண்டா அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் வசிக்கும் இளைஞர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் நேற்றிரவு சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோனை பறக்கவிட்டார்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், அந்த இளைஞரை கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஹஸ்ரத்கஞ்ச் சந்திப்பில் வசிக்கும் அங்கித் சிங் என அடையாளம் காணப்பட்டார். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT