இந்தியா

நாடாளுமன்ற திறப்பு விழாவில் அனைத்து மத வழிபாடு!

DIN

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் சர்வமத பிரார்த்தனை தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலவேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் ஹிந்து மத வழிபாட்டைத் தொடர்ந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியம், பெளத்தம் போன்ற அனைத்து மத வழிபாடு நடைபெற்றது.

அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தினர். சங்கராச்சாரியார்கள், பாதிரியார்கள், மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் அனைத்து மத வழிபாட்டில் பங்கேற்றனர். 

வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார். 

நாடாளுமன்ற கட்டடப் பணியில் ஈடுபட்ட அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பொன்னாடைப் போர்த்தி பிரதமர் நரேந்திர மோடி கெளரவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT