இந்தியா

நாதஸ்வரத்தில் இசைக்கப்பட்ட வந்தே மாதரம் பாடல்!

DIN

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் நாதஸ்வர இசைக் கருவியில் வாசிக்கப்பட்டது. நாதஸ்வரம், தவில் இசைக்கருவிகள் கொண்டே இசை முழக்கப்பட்டது. 

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சா்வ மத பிராா்த்தனைகளுடன் ஞாயிற்றுக்கிழமை இன்று (மே 28) காலை தொடங்கியது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அதிகாரபூா்வமான நிகழ்ச்சி காலை 12 மணிக்கு நடைபெறுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக பாரம்பரிய சடங்குகள் காலையிலேயே தொடங்கியது.

வேத மந்திரங்கள் முழங்க தமிழக ஆதீனங்கள், ஓதுவார்கள் நடத்தும் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் கலந்துகொண்டு, வழிபாட்டில் ஈடுபட்டார். அவருடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் கலந்துகொண்டார். 

நடாளுமன்ற கட்டட திறப்பு விழாவையொட்டி சிறப்பு பூஜைக்குப் பிறகு ஆதீனங்களிடமிருந்து செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார். 

பூஜை நிகழ்ச்சிக்கு பிறகு செங்கோல் முன்பு மண்டியிட்டு பிரதமர் வணங்கினார். பின்னர் செங்கோலை ஏந்தியபடி ஆதீனங்களிடம் தனித்தனியாக ஆசிபெற்றார். 

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மக்களவை தலைவர் இருக்கை அருகே செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார். செங்கோலை செங்குத்தாக நிலைநிறுத்தி, குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். 

அப்போது வந்தே மாதரம் பாடல் நாதஸ்வரத்தில் இசைக்கப்பட்டது. அப்போது 
புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான கல்வெட்டை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். உடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இருந்தார்.

நாடாளுமன்ற கட்டடப் பணியில் ஈடுபட்ட அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பொன்னாடைப் போர்த்தி பிரதமர் நரேந்திர மோடி கெளரவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT