இந்தியா

தமிழக ஆதீனங்களின் சிறப்பு வழிபாட்டில் மோடி!

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவையொட்டி தமிழக ஆதீனங்கள் நடத்தும் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.

DIN

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவையொட்டி தமிழக ஆதீனங்கள் நடத்தும் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். அவருடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் கலந்துகொண்டுள்ளார். 

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சா்வ மத பிராா்த்தனைகளுடன் தில்லியில் நடைபெற்று வருகிறது. புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்பு பூஜைகள் தொடங்கியுள்ளன. 

இதற்காக புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி காலை 7.15 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வருகை புரிந்தார். 

காலை 7.30 மணியளவில் ஹோமம் பூஜைகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ளார். 

வேத மந்திரங்கள் முழங்க தமிழக ஆதீனங்கள், ஓதுவார்கள் நடத்தும் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் கலந்துகொண்டு, வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தான் எனை வென்றான்... தர்ஷு சுந்தரம்!

பண்டைய இந்தியர்கள் கலாசாரத்தைப் பரப்பினர், மதம் மாறவில்லை: மோகன் பாகவத்

ஆண்பாவம் பொல்லாதது டிரெய்லர்!

தீபாவளியின் தொடக்கம்... அந்தாரா!

தம்பி தலைவர் தலைமையில் டீசர்!

SCROLL FOR NEXT