உஜ்ஜைனில் பலத்த காற்றால் மஹாகல் லோக் கோயிலில் 6 சிலைகள் சேதம்
உஜ்ஜைனில் உள்ள மஹாகல் லோக் கோயிலில் பலத்த காற்றின் காரணமாக ஆறு 'சப்தரிஷி' சிலைகள் விழுந்து சேதம் அடைந்தன.
உஜ்ஜைனில் உள்ள மஹாகல் லோக் கோயிலில் பலத்த காற்றின் காரணமாக ஆறு 'சப்தரிஷி' சிலைகள் விழுந்து சேதம் அடைந்தன.
மத்திய பிரதேச மாநிலம், இன்று அதிகாலை பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக உஜ்ஜைனில் உள்ள மஹாகல் லோக் கோயிலில் ஆறு 'சப்தரிஷி' சிலைகள் விழுந்து சேதம் அடைந்தன. சேதங்களை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் குமார் புருஷோத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, இன்று அதிகாலை 3 மணியளவில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக சில சப்தரிஷி சிலைகள் கீழே விழுந்து கிடக்கின்றன. அவற்றை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தும் சரியாகிவிடும் என்றார்.
இதற்கிடையில், அடுத்த 3-4 மணி நேரத்தில் ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
திங்கட்கிழமை உத்தரகண்டின் உயர் பகுதிகளில் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.