இந்தியா

உ.பி.யில் ரயில் தடம் புரண்டு விபத்து!

உத்தரப் பிரதேசத்தில் இருந்து தில்லி நோக்கிச் சென்ற சுஹைல்தேவ் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

DIN

உத்தரப் பிரதேசத்தில் இருந்து தில்லி நோக்கிச் சென்ற சுஹைல்தேவ் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

காஜிப்பூரில் இருந்து ஆனந்த் விஹார் செல்லும் சுஹைல்தேவ் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு பிரக்யாராஜ் ரயில் நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டது.

இதில், ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று முதல் கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திரத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

SCROLL FOR NEXT