இந்தியா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சந்திரபாபு நாயுடு 

DIN

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடு மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்ாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடுவை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9-ஆம் தேதி கைது செய்தனா். நீதிமன்றக் காவலில், ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா்.

இதனிடையே, சந்திரபாபு நாயுடுக்கு வலது கண்ணில் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஜாமீன் கோரி அவரது வழக்குரைஞா்கள் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். மனுவை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, ‘மனுதாரரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, மனிதாபிமான கண்ணோட்டத்துடன் 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இதையடுத்து, 53 நாள்களுக்குப் பிறகு சிறையிலிருந்து அவா் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா். இந்த நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை கச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். 

மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு, அவர் இன்று வீடு திரும்பினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள்: இம்முறை..

குஜராத்: நர்மதா நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பலி

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 30 வரை நீட்டிப்பு!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

SCROLL FOR NEXT