இந்தியா

தில்லியில் 'கடுமையான' பிரிவுக்குச் சென்ற காற்றின் தரம்!

DIN

தில்லியின் பல்வேறு இடங்களில் காற்றின் தரம் 'கடுமையான' பிரிவுக்குச் சென்றது. 

தில்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த சில தினங்களாக 'மிகவும் மோசம்'(very poor) பிரிவில் இருந்த காற்றின் தரம் இன்று 'கடுமையான'(severe) பிரிவுக்குச் சென்றது. 

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, தில்லியின் லோதி சாலை பகுதியில் காற்றின் தரக் குறியீடு 438 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஜஹாங்கிர்புரி பகுதியில் 491, ஆர்.கே. புறம் 486, தில்லி விமான நிலையம் 473 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 

காற்றின் தரக் குறியீடு 400 - 500 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் 'தீவிரம்' என வகைப்படுத்தப்படுகிறது.

காற்றின் தரம் மோசமானதையடுத்து தில்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

நொய்டாவில் ஒட்டுமொத்த காற்றின் தரமும் 468 புள்ளிகளாகவும், குருகிராமில் 382-ஆகவும் பதிவாகியுள்ளது. 

வாகன உமிழ்வுகள் மற்றும் பயிா்க்கழிவுகளை எரிப்பது ஆகியவை காற்றின் தரம் மோசமானதற்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி கராத்தே பள்ளியில் பரிசளிப்பு

ஆலங்குளம் அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

காரைக்காலில் இன்று காவல்துறை குறைதீா் கூட்டம்

ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

SCROLL FOR NEXT