கோப்புப்படம் 
இந்தியா

தெலங்கானா பேரவைத் தேர்தலில் போட்டியில்லை: ஒய்.எஸ். ஷர்மிளா 

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஒய்.எஸ். ஷர்மிளா இன்று தெரிவித்துள்ளார்.

DIN

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஒய்.எஸ். ஷர்மிளா இன்று தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், காங்கிரஸுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதை தடுக்க காங்கிரஸுக்கு தங்களது ஆதரவை வழங்குவதாக தெரிவித்த ஷர்மிளா, கே.சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சியை அகற்றுவதற்காகவே காங்கிரஸுக்கு ஆதரவளிக்கிறது.

ஒய்எஸ்ஆர் தெலங்கானா தொண்டர்கள் அனைவரும் இந்த முடிவுவை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் நவ.30 ஆம் தேதி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், டிச.3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

முன்னாள் முதல்வர் ராஜசேகரின் மகளும், ஆந்திரம் முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, 2019 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஜெகன் மோகன் ரெட்டிக்காக தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்தார், பின்னர்  ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியைத் தொடங்கினார்.

ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைத்தால் காங்கிரஸ் மேலும் வலுப்பெறும் என்பதால் தொடர்ந்து டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கே. வி.பி.ராமச்சந்திரராவ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தெ.ஆ. வீரர்!

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

யமுனை ஆற்றில் உயரும் நீர்மட்டம்! தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்! | Uttarakhand

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

4வது நாளாகக் குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT