முகப்பு
இந்தியா

தில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

தில்லியின் பவானா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
தில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
பகிர்:

தில்லியின் பவானா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தில்லி தீயணைப்பு சேவை இயக்குனர் அதுல் கார்க் கூறுகையில்,

பவானா தொழிற்பேட்டை பகுதியில் செக்டர் 5-ல் உள்ள தொழிற்சாலையில் இன்று காலை 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தொலைபேசி அழைப்பு வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு 20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீயை அணைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு  வருவதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.