இந்தியா

கேதார்நாத் கோயிலில் ராகுல் தரிசனம்! பக்தர்களுக்கு தேநீர் விநியோகம்!!

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார்.

DIN

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி, தேநீர் விநியோகித்தார். 

சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு நேற்று (நவ. 5) வருகைபுரிந்தார். உத்தரகண்ட் மாநிலத்தில் 3 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

சத்தீஸ்கரில் தோ்தல் பிரசாரத்தைத் முடித்துக் கொண்டு அங்கிருந்து கேதாா்நாத் சென்ற அவரை, கோயில் அா்ச்சகா்களும், காங்கிரஸ் தொண்டா்களும் வரவேற்றனர். 

அதனைத் தொடர்ந்து கேதார்நாத் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சாமிதரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று கேதார்நாத்திலுள்ள ஆதி குரு சங்கராச்சார்யா பீடத்தில் தரிசனம் செய்தார். 

பின்னர் கோயில்களில் பக்தர்களுடன் இணைந்து திருப்பணிகள் மேற்கொண்ட ராகுல் காந்தி, இன்று சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்களுக்கு தேநீர் விநியோகித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் அளித்தார்.

அப்போது அங்கு வரிசையில் காத்திருந்த பக்தர்களுடன் ராகுல் காந்தி உரையாடினர். ராகுல் காந்தியுடன் அங்கிருந்த பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

ராகுல் காந்தியின் கேதார்நாத் பயணம் குறித்த புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT