இந்தியா

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான வழக்கு நவ. 10ல் விசாரணை!

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில் நவ. 10 ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது. 

DIN

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில் நவ. 10 ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது. 

தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த  அக். 30 ஆம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தது. 

அதில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காகவும், பரிசீலனைக்காகவும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்து அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்றாமல் தாமதப்படுத்துவது, பரிசீலிக்கத் தவறுவது, செயல்படாமல் இருப்பது, புறக்கணிப்பது ஆகிய செயல்களில் ஆளுநர் ஆர்.என். ரவி ஈடுபடுகிறார் என்றும் அதுபோல துணை வேந்தர் நியமனங்களில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றும் இரு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இந்த மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று கோரிக்கை முன்வைத்தது. 

இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு வருகிற நவம்பர் 10 ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்ற தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அந்த மாநில அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

நெல்லை நகரம், பாளை.யில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT