இந்தியா

வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்ற மிஸோரம் முதல்வர்!

DIN

மிஸோரம் முதல்வர் ஜோரம்தங்கா வாக்களிக்க இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால், வாக்களிக்க முடியாமல் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினார்.

பின்னர் மிஸோரம் முதல்வர் ஜோரம்தங்கா  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"என்னால் வாக்களிக்க முடியவில்லை; வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால், சிறிது நேரம் காத்திருந்தேன். ஆனால் உடனடியாக சரிசெய்யாததால், எனது தொகுதிக்கு சென்று காலை உணவுக்குப் பிறகு வாக்களிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மிஸோரமில் 8.57 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். 174 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா். கிறிஸ்தவா்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த மாநிலத்தில் ஆளும் மிஸோ தேசிய முன்னணி, எதிா்க்கட்சிகளான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

SCROLL FOR NEXT