கர்நாடக அமைச்சருக்கு அவரின் பாதுகாவலர் ஷூ (காலணி) மாட்டிவிடும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஹெச்.சி.மகாதேவப்பா புதன்கிழமை அரசு விடுதியில் ஆய்வு மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதியின் சமையலறையில் இருந்து அமைச்சர் மகாதேவப்பா வெளியில் வரும்போது, அவரின் பாதுகாவலர் அவருக்கு காலணி அணிவித்து விடுகிறார். அப்போது சுற்றி உள்ளவர்களிடம் அமைச்சர் பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.