இந்தியா

சோபியானில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு: ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை

சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தடைசெய்யப்பட்ட  பயங்கரவாத அமைப்பான டிஆர்எஃப் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர். 

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தடைசெய்யப்பட்ட  பயங்கரவாத அமைப்பான டிஆர்எஃப் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: 

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள கத்தோஹலன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  

அப்போது, வீரர்கள் மீது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து நமது வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில், இதுவரை ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும், அவர் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான டிஆர்எஃப் அமைப்புடன் தொடர்புடையவர் என  காவல்துறை அதிகாரி  தெரிவித்தார். 

அவரிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து  தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

இது குறித்த முழுமையானத் தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என காஷ்மீர் மண்டல காவல்துறை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சித்திரச் செவ்வானம்... ராஷ்மி கௌதம்!

ஏடிஎம் பயன்படுத்தும் முன் 2 முறை 'கேன்சல்' பட்டனை அழுத்த வேண்டுமா? உண்மை என்ன?

மென்பொருள் திறன் படிப்புகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

கவிதையின் நிறம் பச்சை... சாதிகா!

எடப்பாடி பழனிசாமிதான் கோடநாடு வழக்கில் ஏ1: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT