இந்தியா

பிகார் சட்டப்பேரவையில் இட ஒதுக்கீடு உயர்வு மசோதா நிறைவேற்றம்!

DIN

பிகார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தும் மசோதா மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

பிகார் சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பிகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை நேற்று(புதன்கிழமை) வெளியிட்டுப் பேசிய முதல்வர் நிதீஷ்குமார், மாநிலத்தில் இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

உயர்சாதி வகுப்புகளுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு சேர்த்து 75% ஆக உயர்த்தும் முடிவை முன்வைத்தார். 

இந்நிலையில், பிகாரில் இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதையடுத்து பிகார் மாநிலத்தில் உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீடு 10% சேர்த்து தற்போது இட ஒதுக்கீடு 75% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT