இந்தியா

உத்தரகண்ட்: சுரங்கப்பாதைகளை இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரம்

உத்தரகண்டில் சுரங்கம் தோண்டும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 36 சுரங்கப் பணியாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர்.

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசியில் ஞாயிற்றுக்கிழமை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளின்போது விபத்து ஏற்பட்டது.

உத்தர்காசி மாவட்டத்தில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த சுரங்கப்பாதை ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அதில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். 

சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து பேரிடர் மீட்புக்குழு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றத் தொடங்கியது.

மாவட்டத்தின் அனைத்து அரசு அதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்துள்ள உத்தரகண்ட் அரசாங்கம் உடனடியாக அந்தந்த பணியிடங்களுக்குச் சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு 24 மணி நேரமும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. 

சில்க்யான் மற்றும் தண்டல்கான் பகுதிகளை இணைக்கும் வகையிலான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 

சுரங்கப்பாதை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஹைட்ரோ எலக்ட்ரிசிட்டி இன்வெஸ்ட்மென்ட் அண்ட் டெவலப்மண்ட் கம்பெனி லிமிடெட் (HIDCL) அதிகாரிகளின் கூற்றுப்படி, சுமார் 40 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இடிபாடுகளை அகற்றி சுரங்கப்பாதையை திறப்பதற்கான முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்பு பணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் காவல்துறையின் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT