கோப்புப்படம் 
இந்தியா

கலப்பட உணவை விற்றால் ரூ.25,000 அபராதம், 6 மாதம் சிறை

கலப்படமான உணவு அல்லது பானங்களை விற்பனை செய்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் விதிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

DIN

கலப்படமான உணவு அல்லது பானங்களை விற்பனை செய்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் விதிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

கலப்படமான உணவை விற்பனை செய்வோருக்கு தற்போது 6 மாதம் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படுகிறது.

‘கலப்படமான உணவால் பொதுமக்கள் உடல்நலனில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அத்தகைய உணவை விற்பனை செய்வோருக்குத் தற்போது வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை. எனவே இதற்கான தண்டனையை உயா்த்த முடிவு செய்துள்ளோம்’ என உள்துறை விவகாரங்களின் நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான ப்ரிஜ்லால் தெரிவித்தாா்.

மேலும் பாரதிய நியாய சம்ஹிதா 2023 மசோதாவின் கீழ் (இந்திய தண்டனைச் சட்டம் 1860) குற்றவாளிகள் ‘சமூக சேவைகள்’ மேற்கொள்வதை ஒரு தண்டனையாக வழங்கும் சட்டத்தையும் நாடாளுமன்ற நிலைக்குழு வரவேற்றுள்ளது.

இதுகுறித்த தெளிவான நடைமுறைகளை நாடாளுமன்றக் குழு விரைவில் வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT