உத்தவ் தாக்கரே 
இந்தியா

பாஜகவினருக்காக தேர்தல் விதிகள் மாற்றப்பட்டுள்ளதா? - உத்தவ் தாக்கரே கேள்வி

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். 

DIN

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். 

230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நாளை(நவ. 17) ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மதத்தை வைத்து வாக்கு சேகரிக்கும் பாஜகவினர் மீது குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'பாஜகவுக்கு வாக்களித்தால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவச பயண சேவை' என்று கூறி வாக்கு சேகரித்தார். அதுபோல கர்நாடகத் தேர்தலின்போது வாக்கு சேகரித்த பிரதமர் மோடி, 'நீங்கள் வாக்களிக்கும்போது அனுமன் பெயரைக் கூறுங்கள்' என்றார். 

இவ்வாறு பாஜகவினருக்காக தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா? என்றும் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், 'ராமர் கோயிலுக்கு இலவச பயண சேவை என்றால் ஏன் மத்தியப் பிரதேச மக்களுக்கு மட்டும்? ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள மக்களுக்கும் வழங்கலாமே? அமித் ஷாவுக்கு தெரியும் அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்று. எனவேதான் ராமரை வைத்து வாக்கு கேட்கிறார்கள்' என்றார். 

தேர்தல் ஆணையத்தின் இந்த இரட்டை நிலைப்பாடு குறித்து சிவசேனை எம்.பி. அனில் தேசாய், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT