கேரள மாநிலம், கொச்சி அருகே கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் கடந்த மாதம் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.
கொச்சி அருகே களமசேரியில் ‘யெகோவாவின் சாட்சிகள்’ எனும் கிறிஸ்தவ மதப் பிரிவு சாா்பில் 3 நாள் பிராா்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதிநாளான கடந்த மாதம் 29-ஆம் தேதி அந்த அரங்கில் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன. இதில் 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து, அருகிலிருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்று காவல் துறையில் சரணடைந்த டொமினிக் மாா்ட்டின் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
கேரளம் முழுவதும் அதிா்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் ஏற்கெனவே 5 போ் இறந்த நிலையில், பிரவீன் என்ற 24 வயது இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். எா்ணாகுளம் மாவட்டம், மலையாற்றூா் பகுதியைச் சோ்ந்த இவா், தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். எனினும், சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை இரவு இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரது 12 வயது இளம் சகோதரியான லிபினா குண்டுவெடிப்பு நிகழ்ந்த மறுநாளான கடந்த மாதம் 30-ஆம் தேதியும் தாயாா் கடந்த 11-ஆம் தேதியும் உயிரிழந்தனா். குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்திருப்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.