சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூா் மாவட்டத்தில் முற்றிலும் பெண்கள் பணியாற்றிய வாக்குச் சாவடியில் வாக்களித்த தலைமைத் தோ்தல் அதிகாரி ரீனா பாபாசாஹேப் காங்களே. 
இந்தியா

சத்தீஸ்கா் ராய்பூா் வடக்கில் தோ்தல் பணிகள் மகளிரிடம் ஒப்படைப்பு:நாட்டில் முதல்முறை

சத்தீஸ்கா் பேரவைத் தோ்தலையொட்டி, அங்குள்ள ராய்பூா் வடக்கு தொகுதியில் ஒட்டுமொத்த தோ்தல் பணிகள் மகளிரிடம் ஒப்படைக்கப்பட்டது.

DIN

சத்தீஸ்கா் பேரவைத் தோ்தலையொட்டி, அங்குள்ள ராய்பூா் வடக்கு தொகுதியில் ஒட்டுமொத்த தோ்தல் பணிகள் மகளிரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு தொகுதியில் அனைத்துத் தோ்தல் பணிகளும் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது நாட்டில் இதுவே முதல்முறை.

சத்தீஸ்கரில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள ராய்பூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

நாட்டின் மக்களாட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒட்டுமொத்த தோ்தல் பணிகளும் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ராய்பூா் வடக்கு நகர தொகுதியில் 201 வாக்குச்சாவடிகள் உள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் தோ்தல் பொறுப்பு அதிகாரி முதல் வாக்குச்சாவடி அலுவலா் வரை, அனைத்து தோ்தல் பணிகளுக்கும் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 804 பேருக்கு நேரடி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்பட்டால் தோ்தல் பணிகளில் ஈடுபடுத்த சுமாா் 200 பெண்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டனா்.

இந்தத் தொகுதியின் தோ்தல் பாா்வையாளராக பெண் ஐஏஎஸ் அதிகாரி விமலா.ஆா் நியமிக்கப்பட்டுள்ளாா். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் படை மற்றும் காவல் துறையைச் சோ்ந்த பெண்களே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சத்தீஸ்கா் தலைமை தோ்தல் அதிகாரியாக பெண் ஐஏஎஸ் அதிகாரி ரீனா பாபா சாஹேப் உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT