கோப்புப் படம். 
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: கரடி தாக்கியதில் இருவர் காயம்

ஜம்மு-காஷ்மீரில் வெவ்வேறு சம்பவங்களில் கரடி தாக்கியதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.  

DIN

ஜம்மு-காஷ்மீரில் வெவ்வேறு சம்பவங்களில் கரடி தாக்கியதில் இரண்டு பேர் காயமடைந்தனர். 
ஜம்மு-காஷ்மீர், கிஷ்த்வார் மாவட்டத்தில் குலாம் ஹசைன் சோஹன் (60) மற்றும் பாபி சந்த் (57) ஆகியோர் தங்கள் வயல்களில் இருந்து நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சத்ரூ பகுதியில் உள்ள பட்டா மற்றும் கவாரின் கிராமங்களில் இருவரும் கரடிகளால் தாக்கப்பட்டனர். 
பின்னர் கரடிகள் இரண்டும் தப்பிச்சென்றன. காயமடைந்தவர்கள் இருவதும் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து, வனவிலங்கு துறை அதிகாரிகள் இரு கிராமங்களுக்கும் சென்று பார்வையிட்டனர். 
மேலும் கரடிகளை பிடிக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களை கரடி தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

SCROLL FOR NEXT