முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த். 
இந்தியா

'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்: ராம்நாத் கோவிந்த்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

DIN

'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 

இக்குழுவின் உறுப்பினா்களாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக இந்த குழு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. 

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்நாத் கோவிந்த்,  'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து அதன் தலைவராக என்னை நியமித்துள்ளது. 

குழுவின் உறுப்பினர்களுடன் ஆலோசித்து மற்றும் மக்களின் கருத்துகளை கேட்டு ஏற்கெனவே இருந்த பாரம்பரியமான 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறையை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவோம். 

தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தொடர்பு கொண்டு இதுகுறித்து ஆலோசனைகளை கேட்டுள்ளேன். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு கட்டத்தில் இதற்கு ஆதரவு அளித்துள்ளன. நாட்டின் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

SCROLL FOR NEXT