கோப்புப்படம் 
இந்தியா

பிரதமர் மோடி, உ.பி. முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!

பிரதமர் மோடி, உத்தப் பிரதேச முதல்வர் யோகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

DIN


பிரதமர் மோடி, உத்தப் பிரதேச முதல்வர் யோகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தாவூத் இப்ராகிமின் கும்பல் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கக் கூறியதாக செவ்வாயன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மும்பையில் உள்ள கிழக்கு சியோனில் வசிக்கும் கம்ரான் அமீர் கான்(29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குற்றம் சாட்டப்பட்டவர் மும்பையின் ஜே ஜே மருத்துவமனையில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டியுள்ளார். நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்றதால் மருத்துவர்களின் மருத்துவப் பரிசோதனை தாமதமாகி வருவதும் பின்னர் கண்டறியப்பட்டது. 

கம்ரான் அமீர் கான் மனநிலை சரியில்லாதவர் என்றும் இதற்கு முன்பு உ.பி முதல்வர் ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்னோட்டப் பயிற்சி: நவ.10-இல் தொடக்கம்

ம.பி. அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான மருந்தில் புழுக்கள்? -அதிகாரிகள் விசாரணை

எழும்பூரில் 3 நாள்கள் பாா்சல் சேவை நிறுத்தம்

21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது: பிரதமா் மோடி

மீனவா் பிரச்னையை இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் வலியுறுத்துங்கள்: பிரதமருக்கு முதல்வா் கடிதம்

SCROLL FOR NEXT