கோப்புப்படம் 
இந்தியா

ஐஆர்சிடிசி இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மீண்டும் செயல்படத் துவங்கியது. 

DIN

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்படத் துவங்கியது. 

ரயில்களில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி (https://www.irctc.co.in/) இன்று(வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் முடங்கியது. ரயில்வேயின் மொபைல் செயலியான 'ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட்' செயலியும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. 

இதனால் இன்று காலை, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 

பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இணையதளம் முடங்கியுள்ளதாகவும் டிக்கெட் முன்பதிவு செய்ய பின்னர் முயற்சிக்கவும் என்றும் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தொழில்நுட்ப காரணங்களால் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்பக் குழுவினர் இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் முன்பதிவு தொடங்கும் என்றும் ஐஆர்சிடிசி எக்ஸ் வலைத்தளத்தில் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு பிற்பகல் 2 மணியளவில் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 61 காசுகள் சரிந்து ரூ.88.19 ஆக நிறைவு!

ஸ்ரீநகரில்.. ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசர தரையிறக்கம்!

செவ்வானம்... கனிகா!

இலங்கையில் மேலும் 2 முக்கிய அரசியல் தலைவர்கள் கைது!

உ.பி.யில் இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை தூக்கிச்சென்ற குரங்கு !

SCROLL FOR NEXT